*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 29_*
*_15.10.2018_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்யும் வேலைகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : இலாபம் உண்டாகும்.
பரணி : சுபிட்சமான நாள்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற பலன் காலதாமதமாக கிடைக்கும். வாகனங்களில் ஏற்படும் பழுதுகள் மூலம் விரயச் செலவுகள் நேரிடலாம். எதிர்பாலின மக்களிடம் நிதானமாக செயல்படவும். குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் நெருக்கமானவர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : விரயச் செலவுகள் உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : தெளிவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பூர்வீகம் தொடர்பான சுபச் செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.
புனர்பூசம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
புதிய முயற்சிகள் கைகூடும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் முன்னேற்றத்தை அளிக்கும். உடனிருப்பவர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : ஆதாயம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான பயணங்களில் கவனம் வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : செலவுகள் குறையும்.
பூரம் : பயணங்களில் கவனம் வேண்டும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் இலாபம் உண்டாகும். கௌரவ பதவிகள் மூலம் உங்களின் மதிப்பு உயரும். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடன்பிறப்புகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உறவினர்களால் சுபச் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.
சுவாதி : கனிவுடன் பேசவும்.
விசாகம் : சுபச் செலவுகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். தொழிலில் கூட்டாளிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். மனை தொடர்பான விவகாரங்களில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
செய்யும் வேலைகளில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க காலதாமதமாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். பொருளாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். நினைவாற்றல் மேம்படும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : சிக்கல்கள் குறையும்.
அவிட்டம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்கள் இலாபகரமாக அமையும். வெளியூர் பணிகளால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
சதயம் : தடைகள் நீங்கும்.
பூரட்டாதி : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பழைய நினைவுகளால் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : செயல்பாடுகளில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.
ரேவதி : கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
