*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 24_*

*_09.08.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி மற்றும் விற்பனை மிதமான அளவில் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

நெருக்கடியான சூழல் அகலும். எதிர்காலத்திற்காக சேமிக்க முயல்வீர்கள். எதிர்ப்புகளால் உண்டான இன்னல்கள் குறையும். தொழிலில் தடைபட்ட தனவரவு கிடைக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தடைபட்ட செயல்களை முடித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சேமிக்க முயல்வீர்கள்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் நற்செயல்களால் பெற்றோர்க்கு பெருமை கிடைக்கும். நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பணியில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வீர்கள். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : பெருமை உண்டாகும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

தொழிலில் திட்டமிட்ட பணிகள் நிறைவேற கூடுதல் காலம் தேவைப்படும். எதிர்பார்த்த கடனுதவிகளால் சாதகமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் உரையாடும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : உரையாடலில் நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

திட்டமிட்ட செயல்களில் உள்ள தடைகள் நீங்கும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்கால பணி குறித்த சிந்தனைகள் மேலோங்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மகம் : தடைகள் நீங்கும்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

தொழில் சம்பந்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். தொழிலில் திருப்திகரமான சூழல் அமையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : திருப்திகரமான நாள்.
சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

பெரியோர்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நல்லது. சக ஊழியர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். போட்டிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : விவேகம் வேண்டும்.
சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : மாற்றம் பிறக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

பொதுநல செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த செயல்களை உடனடியாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மனக்கசப்புகள் வந்து போகும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : விரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். எண்ணிய காரியத்தில் ஜெயம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : ஜெயம் கிடைக்கும்.
சதயம் : மதிப்பு கூடும்.
பூரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

வீடு மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். பதற்றமான சூழலால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.
ரேவதி : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•