*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 21_*

*_05.01.2019_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தந்தைவழி உறவுகளினால் அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : காலதாமதமாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனைகள் மேம்படும். பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்குகளில் கவனத்துடன் செயல்படவும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் எதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பணியில் மாற்றங்கள் நேரிடலாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்த முயல்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : சேமிப்பு உயரும்.
புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சவாலான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ஆயில்யம் : சவாலான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். நட்பு வட்டம் விரிவடையும். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்களில் இருந்த இன்னல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : கடன்சுமை குறையும்.
பூரம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
உத்திரம் : இன்னல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். சகோதரர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : இலாபம் அதிகரிக்கும்.
சித்திரை : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தைரியத்துடன் புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு மேம்படும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த காரியம் கைக்கூடும். அரசு அதிகாரிகளால் அனுகூலமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : சுபமான நாள்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது சாதகமான பலனை அளிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்

விசாகம் : நற்பலன்கள் கிடைக்கும்.
அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : வெற்றி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : இன்பமான நாள்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்பாராத வீண் செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : செலவுகள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். எண்ணிய காரியங்களில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அவிட்டம் : முடிவுகளில் நிதானம் வேண்டும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். செய்யும் செயல்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•