*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_கார்த்திகை 18_*

*_04.12.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உறவினர்களின் மூலம் வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அசுவினி : வெற்றி கிடைக்கும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.
ரோகிணி : புதிய நட்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்த தடைகள் அகலும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : மாற்றம் பிறக்கும்.
திருவாதிரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
புனர்பூசம் : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபமும், பயணமும் உண்டாகும். புதிய இலட்சியத்தை உருவாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். திருமணப்பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நன்மையை அளிக்கும். கருத்துக்களை மற்றவர்களிடம் பரிமாறுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எதிர்காலம் சார்ந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.
சித்திரை : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : தனவரவு மேம்படும்.
சுவாதி : செல்வாக்கு உயரும்.
விசாகம் : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுப்புகள் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் செயல்படவும். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை விருப்பம் போல் மாற்றம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : மதிப்பு கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டிய சூழல் அமையும். உடனிருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டம தினம் என்பதால் அநாவசியமாக யாருக்காகவும் உறுதி அளிக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
ரேவதி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•