திருவள்ளுவர் ஆண்டு 2049
ஆனி 16
30.06.2018
சனிக்கிழமை
இன்றைய ராசிபலன்கள்
•┈┈•❀??????❀•┈┈•
☸மேஷம் :-
இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். பிள்ளைகளின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : அனுகூலம் உண்டாகும்.
பரணி : பணிச்சுமை அதிகரிக்கும்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸ரிஷபம் :-
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
☸மிதுனம் :-
உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். தைரியத்துடன் புதிய காரியங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.
புனர்பூசம் : அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸கடகம் :-
குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடத்தில் மனக்கசப்புகள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸சிம்மம் :-
மூத்த சகோதரர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய காரியங்களில் இருந்த தடைகள் அகலும். எதிர்பாராத தன உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸கன்னி :-
பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸துலாம் :-
வெளியூர் பயணங்களில் இருந்த இன்னல்கள் நீங்கும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
சித்திரை : உங்களின் மதிப்பு உயரும்.
சுவாதி : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
☸விருச்சகம் :-
நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தி உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சகோதரர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : திருப்திகரமான நாள்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸தனுசு :-
தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தையுடன் உறவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸மகரம் :-
பணியில் மாற்றங்கள் நேரிடலாம். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். புதிய வாய்ப்புகள் உண்டாகும். பணி சம்பந்தமான அலைச்சல்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.
அவிட்டம் : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
☸கும்பம் :-
வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : ஆதரவு பெருகும்.
பூரட்டாதி : திருப்திகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
☸மீனம் :-
வாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொருளாதாரம் மேன்மை அடையும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.
