அம்மாபேட்டை: பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பலாத்காரம் செய்த பெயின்டரை, போலீசார் கைது செய்தனர். சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த, 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கிறார். அவரிடம், அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் கார்த்திக், 22, என்பவர் பழகி உள்ளார். அதை பயன்படுத்தி, கடந்த, 20ம் தேதி, ஆசை வார்த்தை கூறி, மாணவியை, கார்த்திக் அழைத்து சென்றார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் செய்தனர். போலீசார் தேடி, அவர்களை மீட்டனர். விசாரணையில், மாணவியை கடத்திக்கொண்டு, திண்டுக்கல், பழனி போன்ற ஊர்களுக்கு, கார்த்திக் சென்றதும், அங்கு, அவரை பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, கார்த்திக்கை, போலீசார் கைது செய்தனர்.