அம்மாபேட்டை: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, டாஸ்மாக் பாரில், திடீரென தீ பிடித்ததால், குடிமகன்கள் கூச்சலிட்டனர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சங்கீத் தியேட்டர் அருகில், டாஸ்மாக் கடை உள்ளது. அதையொட்டி உள்ள பாரில், ஒரு பகுதியில் இறைச்சி, முட்டை போன்ற உணவு வகை சமைப்பர். அங்கு, இறைச்சி சமைக்க, ஊழியர்கள், காஸ் அடுப்பை, நேற்று பற்றவைத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் தீ பிடித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், தண்ணீர் ஊற்றி, தீயை அணைத்தனர். இதைப்பார்த்து, அங்கு நின்றிருந்த குடிமகன்கள் கூச்சலிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.