
சேலம்: தமிழ்நாட்டின் புகழ்மிக்க கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான ஏற்காடு அடிவாரம் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏற்காடு மெயின் ரோட்டில் கொண்டப்பநாயக்கன்பட்டி அருகில் K.K.நகர் காளியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் மெயின்ரோட்டின் அருகே சாக்கடை நீர் துர்நாற்றத்துடன் குப்பை கூளங்கள்,அனைத்து கழிவுகளும் புடைசூழ நடுரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப்பயணிகள் முதல் அரசு,அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் மிக்க சிரமத்துடன் நோய் தொற்று ஏற்படுமோ? என்ற பீதியுடன் வாகனத்திலும், கால்நடையாகவும் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது .ஆகவே இதனை துடிப்புடன் செயலாற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்IAS அவர்கள் நடவடிக்கை எடுக்க மக்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.


