சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு மதுவிலக்கு 14 ( 4 ) -ன்படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 7 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 5 இரண்டுசக்கர வாகனங்கள் மொத்தம் 13 வாகளங்கள் தமிழ்நாடு அரசு ஆணை எண் G.O.M5.39 Home Prohibition and Excise ( VIl ) | Department Dated 22. 10. 2019-ல் குறிப்பிட்டுள்ளபடி 20. 09. 2021 -ந்தேதி காலை 10.00 மணிக்கு சேலம் மாநகரம் குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திய பொது எலத்தில் விடப்படவுள்ளது. ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை சேலம் மாநகரம் குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 18. 09. 2021 -ம் தேதி காலை  10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனங்களை எலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5000 / -ம், மூன்று சக்கர வாகளங்களை எலம் எடுப்பவர்கள் ரூ. 7000 / – ம் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 10000 / -ம் 19. 09.2021-ம் தேதி காலை 09.00 மணி முதல் 10. 00 மணிக்குள் சேலம் மாநகரம் குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள், வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) முழுவதையும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு காவல் கூடுதல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் ( பொ ) மதுவிலக்கு அமப்பிரிவு சேலம் மாநகரம் அல்லது காவல் ஆய்வாளர் மதுவிலக்கு அமல் பிரிவு சேலம் மாநகரம் அவர்களின் அலுவலகத்திளை நேரடியாகவோ தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.