சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிச்சிபாளையம் தேசிய புனரமைப்பு காலனியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இன்று அப்பகுதிக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் சாக்கடை, சாலைகள்  உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி கொடுப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.