சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 5வது கோட்டம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஓடையை தூர்வார வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தூர்வாரும் பணியை நேரில் சென்று மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆய்வு செய்தார். தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
