கன்னங்குறிச்சி,
ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 28). நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சேகரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சேகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
