சில காரியங்கள் நாம் என்ன முயற்சி செய்தாலும், ஏதேனும் ஒரு சில தடங்கள் ஏற்படுதல், தள்ளிச் செல்லுதல் என முயற்சிகள் வீணாக போகக் கூடிய நிலை நீடித்திருக்கும்.

அப்படி நீங்கள் எண்ணிய செயல்கள் நிறைவேற என்ன செய்வதென்று தெரியாமல் மன வறுத்தம் கொண்டிருந்திருப்பீர்கள்.

அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் நடக்காததையும் நடத்திக் காட்ட வல்ல நரசிம்ம மந்திரம். இதை நாம் முழு நம்பிக்கையுடன் சொல்லி வர விரைவில் நம் முயற்சிகள் வெற்றி அடையும்.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறையாவது சொல்லி வாருங்கள்.

பொருள் :

தாயின் கர்பத்தில் அவதரித்திருந்தால் பக்தர்களுக்கு உதவி செய்ய வர தாமதம் ஆகும் என்று தூணிலிருந்து அவதரித்தவனே
பக்தர்கள் நினைத்த உடன், வேண்டி அழைத்ததும் அவர்களின் துன்பத்தை போக்குபவனே
நரசிம்ம பெருமானே உனது திருவடியை சரணடைகிறேன்.

நரசிம்மர் மூல மந்திரம்:

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

இந்த நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி துளசி அர்ச்சனை, செவ்வரளி  உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் அவரின் அருள் பெறலாம்.