வழிப்பறி கொள்ளையன் பிரபல ரவுடி தீனா(a)தீனதயாளன் கைது
சேலம் மாநகரம் அழகாபுரம் காவல் சரகத்தில் 02/04/19 அன்று ரெட்டியூர் கவுண்டர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ரவுடி தீனதயாளன் தன்னை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2000 மற்றும் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் மற்றும் செல்போன் ஆகியவை பிடுங்கி கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் திரு. சீனிவாசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் குற்றவாளி கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அத்வைத ஆசிரமம் ரோட்டில் பழனி (எ) பழனிச்சாமி என்பவரை கத்தியால் வெட்டி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரவுடியை பிடிப்பதற்காக மேற்கு சரக உதவி ஆணையர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு. சீனிவாசன், SSI திரு.மோகன், தலைமை காவலர்கள் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் திரு.சரவணன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளியை 04/04/19ஆம் தேதி கைது செய்து அவனிடமிருந்து ரூபாய் 26,200 மதிப்புள்ள பொருட்களை மீட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்கு சேலம் உட்பட மதுரை, எடப்பாடி, காங்கேயம், திருச்செங்கோடு, ஒகேனக்கல், பொள்ளாச்சி, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 15 கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தீனதயாளன் மீது கடந்த 2016ஆம் வருடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த மேற்கு சரக போலீசாரை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்..
