சேலம் திராவிட மாணவர் கழகம் சார்பில் *தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?* நூல் அறிமுக விழா அண்ணா பூங்கா அருகில் உள்ள காருண்யா ஹாலில் நடை பெற்றது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் தொகுத்தளித்த *தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?* என்ற புத்தகத்தை வெளியிட்டு உரை நிகழ்த்த சிறப்பு விருந்தினராக மானமிகு. சுந்தர ஆவுடையப்பன், நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி நிலையம், திருநெல்வேலி அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சேலம் திராவிட மாணவர் கழகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.