*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 15_*
*_29.01.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_வரலாற்றில் இன்று_*
•┈┈•❀??????❀•┈┈•
*நிகழ்வுகள்*
•┈┈•❀??????❀•┈┈•
661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர்.
1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.
1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.
1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் சோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.
1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.
1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.
2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.
2013 – கசாக்சுதானில் அல்மாத்தி நகரில் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
2017 – கியூபெக் துப்பாக்கிச் சூடு,
2017: கியூபெக்கில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
•┈┈•❀??????❀•┈┈•
*பிறப்புகள்*
•┈┈•❀??????❀•┈┈•
1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809)
1853 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1931)
1860 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1904)
1866 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1944)
1899 – மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 1984)
1915 – வி. வி. சடகோபன், தமிழக நடிகர், கருநாடக இசைப் பாடகர், கல்வியாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர்
1922 – ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2003)
1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-பிரித்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
1935 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர் (இ. 2014)
1939 – ஜெர்மைன் கிரீர், ஆத்திரேலிய ஊடகவியலாளர், நூலாசிரியர்
1941 – காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை அரசியல்வாதி
1947 – லிண்டா பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
1954 – ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்
1957 – சசிகலா நடராசன், தமிழக அரசியல்வாதி
1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி
•┈┈•❀??????❀•┈┈•
*இறப்புகள்*
•┈┈•❀??????❀•┈┈•
661 – அலீ, நான்காவது கலீபா, முகம்மது நபியின் மருமகன் (பி. 601)
1597 – மகாராணா பிரதாப், வட இந்திய மேவார் மாகாண அரசர் (பி. 1540)
1859 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1789)
1933 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர் (பி. 1884)
1934 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (பி. 1868)
1963 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)
1980 – எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்
1983 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (பி. 1926)
1991 – வ. ந. நவரத்தினம், இலங்கை தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1929)
1995 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (பி. 1917)
1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
2003 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1928)
2009 – கு. முத்துக்குமார், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனக்குத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்த தமிழ்நாட்டவர்
2010 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (பி. 1919)
•┈┈•❀??????❀•┈┈•
