உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி வருகின்றனர்.
திருவேணி சங்கமத்தில் அதிகாலை 4 மணிக்கு புனித நீராடலுடன் தொடங்கிய இந்த விழா, மார்ச் 4ம் தேதி வரை 50 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்கையில் நீராட அதிகாலை 5.15 மணி முதல் மாலை 4.20 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கங்கையின் ஒரு பகுதி, அக்காடா பாபா என்றழைக்கும் சாதுக்களுக்காக தனியிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினரும், நீச்சல் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா குட்டி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, தற்காலிக தங்குமிடங்கள், கழிவறைகள், எல்.இ.டி. விளக்குகள், ஏ.டி.எம்.கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
