
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் , வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.மேலும் சேலம் தி சென்னை சில்க்ஸ் சார்பில் ரூபாய் 2லட்சம் மதிப்பில் 750 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை ஜெனரல் மேனேஜர் தேவன், சீனியர் மேனேஜர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர்.
