மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து  இன்று அரசு மாதிரி பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் ராமசாமி தலைமையில் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் அர்ஜுனன் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் குறுங்காடு திட்டத்திற்காக 500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அதில் ஆதி, நாவல், புங்கன், வேம்பு, மலைவேம்பு, பாதாம், மா ,கொய்யா ,வாழை,தென்னை ,பாக்கு ,சிறுநெல்லி ,நறுவல்லி ,அரசு சீதா,சீதா, ராமர் சீதா, திருவோடு, கருங்காலி ,செண்பகம், சொர்க்கம், சப்போட்டா ,மாதுளை, ஆப்பிள், கடம்பு, வேங்கை, ஆடாதடா ,நொச்சி, பலா ,ஈட்டி, புளியமரம் ,வெள்ளை நாவல், இலந்தை ,குண்டுமணி உள்ளிட்ட 60 வகையான 500 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.