தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்திவு தொடங்கியது. மேலும் 5.71 கோடி வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்ய 67,820 வாக்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடக்கும் 38 தொகுதிகளில் 820 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்றைய தேர்தலில்,  தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். 2,95,94,923  ஆண் வாக்காளர்களும் 3,02,69,045 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம். 5,940  பேர் மூன்றாம் பாலினத்தவர்.

காவல்துறையினர், அண்டை மாநில காவலர்கள்,  சிறப்பு அதிரடி காவல் படையினர், இராணுவத்தினர் என பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply