மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக சேலத்தில் முப்பெரும் விழா

சேலம் மாவட்டத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக முப்பெரும் விழா பொங்கல் விழா விருது வழங்கும் விழா இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 05.01.2020 அன்று சேலம் மகுடஞ்சாவடியில் மிக சிறப்பாக  நடைபெற்றது.

 

இவ்விழாவில் வரவேற்புரை கவிஞர் கீரை பிரபாகரன் வழங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்வி பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழகத்தைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் திரு.ஜெயபாலன் அவர்களும், தேசிய செயலாளர் சூர்யா அவர்களும், பொதுச் செயலாளர் வசந்த் அவர்களும், மாநில துணைப் பொதுச்செயலாளர் செல்வராஜ், தலைமை நிலைய செயலாளர் வெள்ளியங்கிரி, தேசிய ஒருங்கிணைப்பாளர் சோலைமலை. ராமகிருஷ்ணன் , மூர்த்தி, மாநில மகளிர் அணி திருமதி. கிருத்திகா, தமிழ்ச்செல்வி,செல்வராணி, தேவிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்த  மாவட்ட சார்பு நீதிபதி கே வி சக்திவேல் அவர்களும், கௌரவ அழைப்பாளராக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராசு மற்றும் சேலம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அவர்களும், குற்றம் குற்றமே வார இதழ் உதவி ஆசிரியர் வழக்கறிஞர் Dr. Press ராம் அவர்களும், அதிரடி குரல் சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

 

இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஏழை எளியோருக்கு வேட்டி சட்டை சமூகத்தில் சிறப்பாக செயல் ஆற்றி வரும் சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்குதல் என விழா சிறப்பாக நடைைபெற்றது. விழா ஏற்பாட்டினை தெற்கு மாவட்ட அமைப்பாளர் டீ கார்த்திக் செய்திருந்தார். விழாவில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply