காசோலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் : மறக்காம படிங்க

parts-of-a-cheque1காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும் . தவிர , காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம் . நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி . காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம் .
ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:
1 . ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee )
2 . காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற
வேண்டும் . (Drawer )
3 . காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee )
4 . காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
5 . காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.
காசோலைகளின் வகைப்பாடு :
பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை . காரணம் , ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.
இடத்தை மையப்படுத்தி காசோலைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன .
1 . உள்ளூர் காசோலை (Local cheque ):
பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப்பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும் .
2 . வெளியூர் காசோலை (Outstation cheque ):
ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை , பிற இடங்களில் வழங்கப்படுகிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும் . இந்த காசோலைகளைப் பயன்படுத்துவது மூலம் , வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம் .
3 . சம காசோலை (At Par cheque ):
இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை . உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது .
மதிப்பின் அடிப்படையில் காசோலைகளின் வகைப்பாடு .
1 . சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque ):
ரூ . 1 லட்சத்திற்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.
2 . உயர் மதிப்புடைய காசோலைகள் (High value cheque ):
ரூ . 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.
3 . பரிசு காசோலைகள் (Gift Cheque ):
அன்பிற்குரியவர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.
காசோலைகள் பொதுவாக நான்கு வகைப்படும்.
1 . கீறாக் காசோலை (Open cheque ):
வங்க்கியில் கவுண்டரிலேயே ஒரு காசோலையைக் கொடுத்து பணத்தைப் பெற முடிந்தால், அது கீறாக்காசோலை எனப்படும் . ஒருவர் தனது சொந்தக் கணக்கில் இருந்து தானே பணத்தைப் பெறலாம் . இல்லையெனில், வேறு யாரிடமாவது கையெழுத்திட்டு கொடுத்து பணத்தைப் பெற சொல்லலாம் .
2 . கொணர்பவர் காசோலை (Bearer cheque ):
கொணர்பவர் காசோலை மூலம் ஒரு வங்கியில் காசோலை கொடுப்பவர் யாராயினும் பணத்தைப் பெற முடியும். இந்த காசோலையை ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வேறொருவருக்குக் கொடுக்கலாம் .
3 . ஆணைக் காசோலை (Order cheque ):
இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் காசோலையாகும் . இத்தகைய காசோலையில் “bearer ” என்ற வார்த்தை அடிக்கப்பட்டு “order ” என எழுதப்படலாம் . பணம் பெறுபவர் (Payee), காசோலைக்குப் பின்புறத்தில் கையெழுத்திட்டு வேறொருவருக்கு அதே காசோலையை மாற்றிவிடலாம்.
4 . கோடிட்ட காசோலை (crossed cheque ):
கோடிட்ட காசோலையை கவுண்டரில் கொடுத்து பணத்தை பெற முடியாது . இத்தகைய காசோலை மூலம் வங்கி , பணம் பெறுபவர் கணக்கில் மட்டுமே பணத்தை வரவாக வைக்கும். ஒரு காசோலையின் மேல் இடப்பக்கத்தில் 2 கோடுகள் வரையப்பட்டாலோ , “account payee ” என எழுதப் பட்டாலோ அது கோடிட்ட காசோலையாகக் கருதப்படும்.
இதுதவிர, பண உத்திரவாதம் அளிக்கும் பல காசோலைகளை வங்கிகள் வழங்க்குகின்றன .
சுய காசோலை (Self cheque ):
சுய காசோலை என்பது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தனக்குத் தானே வரைந்து கொள்ளும் காசோலையாகும். இவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் தானே சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார் . இதற்கு மாற்றாக ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின் தேதியிட்ட காசோலை (Post dated cheque ):
இந்த காசோலை , எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக , பின் தேதியிட்டு அளிக்கப்படும். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை இது செல்லுபடியாகும் .
வங்கியாளரின் காசோலை (Banker ’ s cheque ):
வங்கியாளரின் காசோலை மூலம் கணக்கை வைத்திருப்பவரிடம் இருந்து பணததைப் பெறாமல் , தனது சொந்த நிதியில் இருந்து வங்கி பனத்தை எடுத்துக் கொள்ளும். சாதாரன காசோலையைப் போல வங்கியாளரின் காசோலையை நிராகரித்து விட முடியாது .
பயணியின் காசோலை (Traveller ’ s cheque ):
ஒரு பயணி , வெளிநாட்டுப் பயணாத்தின்போது பணத்திற்குப் பதிலாகக் கொண்டு செல்லக் கூடிய காசோலை . பயணியின் காசோலை ஒரு திறந்த வகை காசோலை . , வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடியது . பயணியின் காசோலை உணவகங்களிலும், அனைத்து இடங்க்களிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பயணத்தின் போது , பயன்படுத்தாத காசோலைகளை மறு பயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பக்கத்தினை  லைக் செய்ய https://www.facebook.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-Oursalemcom-861831790618497/?ref=aymt_homepage_panel இங்கே கிளிக் செய்யவும்.

இனைய தளத்தை கான www.oursalem.com

Leave a Reply