முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்தி கொலை முயற்சி  செய்தவர்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் குத்தி கொலை முயற்சி  செய்தவர்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம்

சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம்  சித்தகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த ராமன், என்பவரது மனைவி தீபாவை பாலு (எ) பாலமுருகன் என்பவர் முன்விரோதம் காரணமாக  30/12/13-ஆம் தேதி  கழுத்து, முதுகுப் பகுதி, வயிற்றுப் பகுதியில் செத்துத் தொலை என கூறி கத்தியால் குத்தியதாக  கொடுத்த புகாரின்பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. வின்சென்ட் அவர்கள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார். குற்றவழக்கில் 22/04/19ஆம் தேதி சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமதி.விஜயகுமாரி அவர்கள் குற்ற வழக்கில் கண்ட குற்றவாளி பாலு (எ) பாலமுருகன், பொன்னாங்காடு, ராவணேஸ்வர நகர், பள்ளபட்டி, என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். குற்ற வழக்கை புலன் விசாரணை செய்து சாட்சிகளை ஆஜர்படுத்திய பள்ளப்பட்டி  காவல் நிலைய  போலீசாரை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.

Leave a Reply