தமிழ்நாடு

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்திவு தொடங்கியது. மேலும் 5.71 கோடி வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்ய 67,820 வாக்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடக்கும் 38 தொகுதிகளில்

தருமபுரி மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், அரூர்(தனி) சட்டமன்ற இடை தேர்தலிலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அரூர் பகுதியில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 14.04.19ஆம் தேதி அரூர் காவல் நிலைய பகுதிகளில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி. ராஜன், சட்டம்- ஒழுங்கு மற்றும் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுஜாதா மற்றும் அரூர் உட் கோட்ட காவல் துணை

இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க மறுப்பு

  இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க மறுப்பு சென்னை: இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மேலும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் மறுக்கப்பட்டதால் விவசாயம் சார்ந்த சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் * உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து * தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் – நீதிபதிகள் * லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் – நீதிபதிகள் #MaduraiHighCourt | #BriberyDeath

அற்புதம்மாள் நடத்தவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : வைகோ

7 பேர் விடுதலைக்காக அற்புதம்மாள் நடத்தவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அற்புதம்மாள் போராட்டத்தில் மதிமுகவினரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் வைகோ கூறினார்.

ஏழைகளுக்கு ரூ.இரண்டாயிரம் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையான பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்காக, நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது இந்த திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என மனுதாரர் தினேஷ் பாபு தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிச்சாமி

சிறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி* உ.பி.: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில்  விவசாயிகளுக்கு ரூ6,000 நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ளார். 2018 டிசம்பர் 1 முதல் கணக்கிட்டு மார்ச் 31-க்குள் முதல் தவணைத் தொகையாக ரூ.2000 வழங்கப்படும். 12 கோடி சிறு,குறு விவசாயிகளுக்கு நிதியுதவி தரும் திட்டம் ரூ.75 ஆயிரம் கோடியில் செய்யப்படுத்தப்படுகிறது . சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை

ஒரு ஆண்டில் தமிழகத்தில் 200 பேர் தற்கொலை கலங்கிக்கிடக்கும் காவல்துறை

*ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்* அடால்ப் ஹிட்லர்….. ச்சும்மா…பெயரைக் கேட்டவுடனே அதிருதில்ல… வசனத்திற்கு பொருத்தமானவர். அவரின் பெயரைக் கேட்டு உலக நாடுகள் நடுங்கின. 1918ம் ஆண்டு யுத்தத்தில் ஜெர்மனி தோற்றதற்கு யூதர்கள் தான் காரணம் என்று நினைத்த ஹிட்லர், வரலாற்றில் எழுதியது மிகப்பெரிய ரத்தச் சரித்திரம். தினமும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை இருட்டறையில் தள்ளி விஷப்புகையிட்டுச் சாகடிக்கச் செய்தார். ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை பல லட்சம் லட்சம் எனக்கூறப்படுகிறது. இத்தனை கொலைகளையும் செய்த

திருமண பதிவுக்கு மணமக்கள் வரவேண்டிய அவசியம் இல்லை: பதிவுத்துறை உத்தரவு!

*திருமண பதிவுக்கு மணமக்கள் வரவேண்டிய அவசியம் இல்லை: பதிவுத்துறை உத்தரவு* சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திருமண பதிவுக்காக மணமக்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான உரிய காரணங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் போதும் என்று பதிவுத்துறை கூடுதல் ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் கடந்த 2009ல் இருந்து திருமணம் கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, திருமணம் நடத்தி வைத்தவர்கள், மணமக்கள் கையொப்பத்துடன் திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிடம்,

ஊடக உரிமை குரல் கூட்டம்

திருச்சியில் ‘ஊடக உரிமை குரல்’ என்ற நிருபர்களின் தன்னெழுச்சி கூட்டம் இன்று மாலை (10.02.2019) 4 மணிக்கு தொடங்கியது. பல சங்கங்களில் இருந்தும் பத்திரிகையாளர்களின் உரிமைக்காக ஒருமித்த குரலாக இந்த சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது குறிப்பிடதக்கது. இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களின் உரிமைக்காக போராடும் தமிழன் வடிவேல், ராபர்ட் ராஜ், உதய்சிங் மற்றும் பத்திரிகையாளர்களின் முதல் முயற்சிக்கு நம்ம சேலம் மற்றும் முத்தமிழ் டிவியின் சார்பாக வாழ்த்துக்கள்.