தருமபுரி மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி

வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், அரூர்(தனி) சட்டமன்ற இடை தேர்தலிலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அரூர் பகுதியில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

14.04.19ஆம் தேதி அரூர் காவல் நிலைய பகுதிகளில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி. ராஜன், சட்டம்- ஒழுங்கு மற்றும் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. சுஜாதா மற்றும் அரூர் உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.சி. செல்லபாண்டியன் ஆகியோரது தலைமையில் கேரளா காவல் துறையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் உட் கோட்ட காவல் துறையினர் என 372 பேர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டினை அரூர் காவல் நிலைய ஆய்வாளர் முனைவர் திரு.கண்ணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். வாக்காளர்கள் எவ்வித பயமும் இன்றி வாக்களிக்க வேண்டும், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் இடையூறு செய்தாலோ, வேறு ஏதாவது சட்ட விரோத செயல்களை செய்தாலோ அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் மற்றும் கொடூர குற்றங்கள் செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்திற்க்கு பாிந்துறை செய்யப்படும் என காவல் ஆய்வாளர் முனைவர் திரு.கண்ணன் ஒளி பெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து கொண்டே சென்றார். வழி நெடுகிலும் பொது மக்கள் கை தட்டி வரவேற்பு கொடுத்தனர்.

Leave a Reply