அரசியல்

தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா தற்கொலை செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை : சேலத்தில் ராகுல் காந்தி பரப்புரை

தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா தற்கொலை செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை : சேலத்தில் ராகுல் காந்தி பரப்புரை சேலம் : சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பாார்த்திபனை ஆதரித்தும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணியை ஆதரித்தும் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பரப்புரை நிகழ்ச்சி வருகின்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு *தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும்;தமிழ்நாடு நாக்பூரில்

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி இறுதிப் பட்டியல்

lதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.! அதன் விவரம் வருமாறு:- மதிமுக ஈரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1. மதுரை 2. கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை திருப்பூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 1. திருவள்ளூர் 2. ஆரணி 3.

இந்தியாவை யாரும் மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது : மோடி பேச்சு

இந்தியாவை யாரும் மிரட்டவோ, அடிபணிய வைக்கவோ முடியாது : மோடி பேச்சு சுரு: ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, யாரிடமும் இந்தியா அடிபணியாது என்றார். தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு தலைவணங்குவதாக கூறிய பிரதமர், நாடு பாதுகாப்பாக உள்ளதாக மக்களிடம் உறுதிகூறுவதாக தெரிவித்தார். நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் என்ற அவர், இந்தியாவை யாரும் மிரட்டவும் அனுமதிக்க

ரஜினியின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன் : கமல்ஹாசன்

ஒத்த கருத்து உடையவர்கள், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் விருப்ப மனுக்கள் பெறலாம் மக்கள் நீதி மய்ய மன்றம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக தேமுதிக எங்களிடம் பேசவில்லை என்று கூறிய கமல் ஹாசன், கூட்டணி குறித்து சில கட்சிகள் தொடர்பு கொண்டு உள்ளனர், இது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரஜினியின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு எடுத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார். நிர்வாகிகளை கேட்டறிந்த பின் கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அன்புமணி, காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் கொண்டுவரக் கூடாது என்ற பாமகவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று அன்புமணி கூறினார்.

எங்களை பார்த்து பாஜகவின் பி டீம் என்கிறார்கள்: கமல்ஹாசன்

பாஜகவின் பி டீம் என தங்களை யாரும் சொல்லக்கூடாது என்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசனை கவுரவிக்கும் விதமாக, தாள வாத்தியம் இசைக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளிக்கலாம் என்றார். கோடி கோடியாக சம்பாதித்தாலும், கடைசியில் அந்த சொத்து உடன் வராது சொத்து கூட வராது என்றும், மருத்துவமனையில் இருக்கும்போது, அந்த சொத்து

நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாட்டை வரும் 27-ம் தேதி அறிவிப்பேன்-எம்எல்ஏ கருணாஸ் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை வரும் 27-ம் தேதி அறிவிப்பேன் என்று எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது… பிரேமலதா பேட்டி

சென்னை: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது என்று விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். மேலும் விஜயகாந்தின் நலம் விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சி முடங்கி கிடக்கிறது: திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

   சென்னை தியாகராயநகரில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:- அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்த போதுதான் சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. கலைஞர் தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளியவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க. ஆட்சி காணொலி காட்சி ஆட்சியாக இருந்தது. இப்போது இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இன்றைய ஆட்சி முடங்கி

காங்கிரசை கலைக்க வேண்டுமென்ற காந்தியின் கனவை நனவாக்க முயலும் ராகுல்

பானாஜி : ‘சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டுமென மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசி உள்ளார். கோவா மாநில பாஜ கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டுமென மகாத்மா காந்தி கனவு கண்டார். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அவர் விரும்பினார். காந்தி கண்ட