புளு சட்டை மாறனுக்கு வெள்ளை சட்டை கிடைக்குமா ?

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் வெளியான சார்லி சாப்ளின் -2 படம் கடந்த வாரம் வெளியானது. அந்த படத்தின் விமர்சனத்திற்க்கு தமிழ் டாக்கீஸ் புளு சட்டை மாறன் விளம்பரம் கேட்டதாகவும் அதனை தர மறுத்ததால் தவறாக விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. தனக்கென ஒரு பார்வையாளர் கூட்டத்தை வைத்துக் கொண்டு எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் திரைவிமர்சனம் என்ற பெயரில் அனைவரையும் விளம்பரம் என்ற பெயரில் மிரட்டி பணம் கேட்பதாகவும், பணம் தர மறுத்தால் நாகரீகம் இல்லாமல் விமர்சிப்பதாகவும் தயாரிப்பாளர் புகார் அளித்தார். இவரின் தவறான விமர்சனங்களால் தயாரிப்பாளர்களுக்கு பெறுத்த நஷ்டம் வருவதாக கூறப்படுகிறது. பலரை மிரட்டி பணம் பறிக்கும் புளு சட்டை மாறன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்து வெள்ளை சட்டை வாங்கி தருவார்களா என பல திரை துறையினர் ஆவலாக உள்ளனர்.

Leave a Reply