பாரதிய ஹிந்து பரிவார் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

05.01.2020 சேலம்

பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சார்பாக சேலம் மாவட்டத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் வினோத்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் dr press ராம், மாநில ஆலய வழிபாட்டு பேரவை செயலாளர் சாக்ரடீஷ், மாவட்ட தலைவர் வேலவன், மாவட்ட அமைப்பாளர் பிரபு, மாவட்ட It பிரிவு தலைவர் அருண்பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளைஞரணியை வலுப்படுத்துவது, மாவட்ட, நகரம், ஒன்றியம் மற்றும் கிளைகள் என உறுப்பினர்களை சேர்ப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கணேஷ், தனபால், விமல் ஆகிய சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply