பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் சின்ன முனியப்பன் கோவில் பகுதியில் 20.10.2019 இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். சேலம் மாவட்ட தலைவர் வேலவன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் பிரபு, இந்து ஆலய வழிப்பாட்டு பேரவை மாவட்ட தலைவர் சாக்ரடீஸ் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட இளைஞர் அணி தலைவர் வினோத்கண்ணன், செயலாளர் மோகன்குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். இந் நிகழ்ச்சியில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராமர் கோயில் கட்டுமானத்தின் செயல் தலைவரும், BHP தேசிய தலைவருமான ராஜிவ் ஜி மகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தெரிவித்தும், ஏழை எளிய மக்களுடன் சிறப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது என பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Leave a Reply