ரஜினியின் 2.0 படத்தில் நான் நடிக்கிறேனா – ரம்யா கிருஷ்ணன் பதில்

பாகுபலி படம் மூலம் மறுபடியும் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு படத்தில் அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வரும் நிலையில், ரஜினியின் 2.0 படத்திலும் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வந்தது.

ஆனால் இந்த செய்தியை தற்போது ரம்யாகிருஷ்ணன் மறுத்துள்ளார். ‘2.0’ படத்தில் நடிக்க தன்னை யாரும் இதுவரை அணுகவில்லை என்றும் இந்த செய்தி வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply