மொபைல் போன்

மொபைல் போன் கதிரியக்கம் காரணமாக தூக்கமின்மை, தலைவலி, குழப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் இல்லாமல் இருக்கும் போதும், சிக்னல் இல்லாத போதும் ஒருவித பயம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த போபியாவுக்கு Nomophobia என்று பெயர். சராசரியாக ஒருவர் தினமும் 110 முறை மொபைலை அன்லாக் செய்து பார்க்கிறார். அமெரிக்காவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் 47 சதவிகிதத்தினர் அது இல்லாமல் தங்களால் வாழவே முடியாது என்கின்றனர்.மொபைல் போன் எறிந்து விளையாடு வது ஃபின்லாந்தில் அதிகாரப்பூர்வ விளையாட்டாக உள்ளது.

47 சதவிகிதத்தினர் அருகில் இருப்பவரை தவிர்ப்பதற்காகவே மொபைல் போனை எடுத்துப் பார்ப்பதாகக் கூறுகின்றனர். டாய்லெட் கதவு கைப்பிடிகளில் இருப்பதை விடவும் 18 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் நமது மொபைல் போனில் உள்ளன. இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மொபைல் போன்கள் டாய்லெட்டில் தவறி விழுந்து வீணாகின்றன. உலகின் ஒட்டுமொத்த டாய்லெட்டுகளின் எண்ணிக்கையை விடவும் அதிக மொபைல் போன்கள் உள்ளன. சிறுநீரைப் பயன்படுத்தி மொபைல் போனை சார்ஜ் செய்யும் விசித்திர முறையை சில விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply